சரோஜாவும்... 'கிக்' ஸ்னேகாவும்!

ஆனால் விழாவில் சூட்டைக் கிளப்பிவிட்டது ஸ்னேகாவின் ஜில் தோற்றம்!. விழாவுக்கு வந்திருந்த பெருசுகள் முதல் இளசுகள் வரை ஒரு முறை ஸ்னேகாவை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டனர். அம்மணியின் காஸ்ட்யூம்தான் அந்த ஏக்கப் பெருமூச்சுக்களுக்குக் காரணம்.
வழக்கமாக சேலை, முழுதாய் மறைக்கும் சுடிதார் அணிந்தே பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஸ்னேகா, முழங்காலுக்கு மேல் உயர்ந்த ஸ்கர்ட், அதற்கேற்ற லோ கட் டாப்ஸ் என கேமரா கண்களை முழுக்க தன்பக்கமே கட்டிப் போட்டார் விழா முடியும் வரை.
ஸ்னேகாவா இப்படி?...
"என்ன இப்படிக் கேக்கறீங்க... இது போயி ஆபாசமா... ஆரம்பத்துலருந்து பாவாடை தாவணியிலேயே அதிகமா வந்து போனதுல என்னோட இமேஜ் இப்படியாகிடுச்சி போல. நானும் சின்னப் பெண்தான். கல்லூரிப் பெண்களைப் போல குட்டைப் பாவாடை அணியும் வயசுதான். இப்போ விட்டா அப்புறம் இந்த உடைகளை எப்போ போடறது?" என்கிறார் தனது படபடப்பு பிராண்ட் குரலில்.
விழாக்களுக்கு வருவதில் மட்டுமல்ல... நடித்துக் கொண்டிருக்கும் புதுப் படங்களிலும் இதைவிட சிக்கனமான உடைகளைக் கேட்டு வாங்கி அணிந்து யூனிட்டிலுள்ளவர்களுக்கு ஜுரம் வர வைத்துள்ளாராம்.
அந்தப் படங்கள் வந்தாதான் தெரியும், எத்தனை பேருக்கு வேப்பிலை அடிக்க வேண்டியிருக்குமென்று கண்சிமிட்டுகிறார்கள் கோடம்பாக்க கோடாங்கிகள்!!


Click it and Unblock the Notifications











