'இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!' - செல்வராகவன்

By Sudha

விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவுரை சொன்னதே முன்னாள் மனைவி சோனியா அகர்வால்தான், என்று கூறினார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். தன் மைத்துனர் தனுஷின் ஆடுகளம் பாடலை ரிங்டோனாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு செல்வராகவன் குடும்பத்தினருடன் இப்போதும் நெருக்கமாக உள்ளார் சோனியா அகர்வால்.

இப்போது செல்வராகவன் இரண்டாம் உலகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்த செல்வராகவன், அவரையை திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

விவகாரத்து ஆன குறுகிய நாட்களிலேயே செல்வராகவன் இரண்டாம் திருமணத்துக்கு தயார் ஆவது சோனியா அகர்வாலுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி சோனியா அகர்வாலிடம் கேட்டபோது, செல்வராகவனுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

செல்வராகவனிடம் கேட்டபோது இப்படிக் கூறினார்:

"கடந்த ஒரு வருடமாகவே சோனியா அகர்வால் என்னிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். 'தனியா இருக்காதீங்க திருமணம் செய்து கொள்ளுங்கள்..' என்று அடிக்கடி அறிவுறுத்தினார். அந்த அளவு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் உள்ளோம்.

கீதாஞ்சலியை நான் திருமணம் செய்வதை அறிந்து சோனியாதான் மிகவும் சந்தோஷப்பட்டார். நானும் சோனியா அகர்வாலும் விவகாரத்துக்கு முன்பு இரண்டு வருடமாக பிரிந்துதான் இருந்தோம். விருப்பப்பட்டுதான் இந்த பிரிவு முடிவை எடுத்தோம். இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது திருமணமா? என்று கேட்கிறார்கள்.

விவாகரத்து ஆனவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. கீதாஞ்சலி நல்ல பொண்ணு. என்னைப்போல அவருக்கும் சினிமா மேல் காதல் இருக்கிறது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X