ஸ்டார் டிவி-பாலாஜி டெலிபிலிம்ஸ் மோதல்: நின்றது மகா மெகா தொடர்

By Staff

Ekta Kapoor
ஸ்டார் டிவிக்கும் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸுக்கும் மோதல் வலுத்தையடுத்து ஏக்தா கபூரின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான 'க்யோங்கி சாஸ் பி கபி பஹூ தி' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) தொடரை நிறுத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது ஸ்டார் டிவி.

இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என பாலாஜி டெலிபிலிம்ஸ் கூறினாலும், அது பற்றிக் கவலைப்படாமல் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் வேறு சீரியலின் விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது ஸ்டார்.

இதனால் இதுவரை திரைக்குப் பின்னால் இரு நிறுவனங்களுக்குமிடையே நடந்து வந்த மோதல் இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது.

மொத்தம் 6 சீரியல்களை பாலாஜி டெலிபிலிம்ஸ் ஸ்டாருக்காக தயாரித்துக் கொடுத்தது. டிஆர்பி ரேட்டிங் சரிந்துவிட்டது எனக் கூறி நிகழ்ச்சித் தயாரிப்புகளில் பாலாஜி குழுமத்துடனான தனது ஒப்பந்தத்தை சமீபத்தில்தான் முறித்துக் கொண்டது ஸ்டார்.

கூடவே பாலாஜி டெலிபிலிம்ஸில் தனக்கிருந்த பங்குகளில் 26 சதவிகிதத்தை திரும்பக் கொடுத்துவிட்டது.

ஸ்டாரின் இந்த நடவடிக்கைகளால் தனது நிறுவனத்துக்கிருந்த நல்லபெயர் கெட்டுப் போனதோடு, பங்குகளின் மதிப்பும் குறைந்துவிட்டதால் ரூபர்ட் முர்டாக் மற்றும் அவரது நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பாலாஜி டெலிபிலிம்ஸ் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X