அவன்-இவன், 'விஷாலி'!

By Sudha

Vishal and Neetu Chandra
இயக்குநர் பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தில் விஷால் அரவாணி வேடத்தில் வருகிறாராம். இதை படு ரகசியமாக வைத்திருக்கிறார் பாலா.

நான் கடவுள் படத்திற்காக தேசிய விருது பெற்ற பாலா, இயக்கி வரும் அடுத்த படம் அவன் இவன். வழக்கம் போல இந்தப் படத்தையும் படு ரகசியமாக படமாக்கி வருகிறார் பாலா. படம் குறித்த ஒரு தகவலும் வெளியாகாத வண்ணம் கப்சிப்பாக நடந்து வருகிறது படப்பிடிப்பு.

படத்தில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் கெஸ்ட் ரோல் செய்கிறார் சூர்யா. இந்த நிலையில் விஷால் ஏற்றுள்ள வேடம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இப்படத்தில் விஷால் அரவாணி வேடத்தில் நடிக்கிறாராம். வேடப் பொருத்தமும், நடிப்பும் கன கச்சிதமாக வந்துள்ளதாம். நடிப்பில் தத்ரூபம் இருக்க வேண்டும் என்பதற்காக விஷாலுக்கு நிறைய பயிற்சிகளைக் கொடுத்து வருகிறாராம் பாலா. விஷாலும் கூட தனியாக பயிற்சி எடுத்துமெருகூட்டிக் கொள்கிறாராம்.

படத்தின் ஹீரோயின் ஜனனி அய்யரையும் நடிப்பில் வெளுத்துக் கட்ட வைத்து வருகிறாராம் பாலா.

சேது என்ற மெகா ஹிட்டைக் கொடுத்த பின்னர் நந்தா படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையைப் பயன்படுத்தினார் பாலா. அதேபோல, நான் கடவுள் படத்திற்காக பிரமாதமாக இசையமைத்த இளையராஜாவுக்குப் பதில் இப்படத்தில் யுவன் இசையை பயன்படுத்துகிறார் பாலா.

வழக்கம் போல நிதானமாக படத்தை எடுத்து வந்தாலும் கூட தரத்தில் சற்றும் குறைவிருக்காது என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X