சந்தோஷ் - மோகினி மோதல்!

By Staff

Dhanusha with Nayanatara
கோலிவுட்டில் இது வித்தியாசமான மோதல். ஒரே நேரத்தில் வெளியான இரு தெலுங்கு ரீமேக் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. இரு படங்களுக்குமே தமிழகம் முழுவதும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதால், கோலிவுட்டில் ரீமேக் படங்களின் மீதான மோகம் மேலும் அதிகரித்துள்ளதாம்.

தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் பொம்மரிலு. பாஸ்கர் இயக்கிய இப்படத்தை ஜெயம் ரவி - ஜெனீலியா நடிக்க சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது.

அதேபோல தெலுங்கில் வெளியான அடவரி மடலகி அர்த்தலு வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் செல்வராகவன் இயக்கியிருந்தார். திரிஷா நடித்திருந்தார். தமிழில் செல்வாவின் உதவியாளரான ஜவஹர் இயக்க, தனுஷ், நயனதாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

இரு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக சந்தோஷ் சுப்ரமணியம் சென்னை முதல் குமரி வரை உள்ள பெருநகரங்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். ரவி, ஜெனீலியா கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாம். இளைஞர்கள், யுவதிகளின் கூட்டம் தியேட்டர்களில் கட்டி ஏறி காலரைப் பிரிக்கிறதாம்.

அதேபோல தனுஷ், நயனதாராவின் யாரடி நீ மோகினிக்கும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறதாம். ஏ சென்டர்களில் ஆரவாரம் இல்ைல என்றாலும் பி மற்றும் சி சென்டர்களில் கூட்டம் முண்டியடிக்கிறதாம்.

இரு படங்களிலும் ஜெயம் ரவியின் படம் சற்று முன்னணியில் உள்ளதாக தியேட்டர் நிலவரங்கள் கூறுகின்றன.

மே 1ம் தேதி வரை இந்த நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. மே 1ம் தேதி விஜய்யின் குருவி திரைக்கு வருகிறது. எனவே அதுவரை இந்தப் படங்களுக்கு ஜாலிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X