'கலைஞருக்கு' ரூட் க்ளியர்... 'ராஜ்'-க்கு அனுமதி நிறுத்தம்!

ஏற்கெனவே இக்குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் செய்தி, சிரிப்பொலி, இசையருவி சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.
இது தவிர சர்வதேச அளவில் பிரபல செய்திச் சேனலான பாக்ஸ் டிவி குழுமத்திலிருந்து 4 சேனல்களும், இ லைவ், ஏபிஎன் -ஆந்திரஜோதி, அப்னா நியூஸ், ப்ரெஷ் டிவி உள்ளிட்ட சானல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ராஜ் டிவி குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள், புதிதாக விண்ணப்பித்த 23 சேனல்களில் 13 சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குறித்த காலத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால், அந்த அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது அரசு.
டிவி18 குழுமம் 3 சேனல்களுக்கும், இன்பர்மேஷன் டிவி நிறுவனம் 4 சேனல்களுக்கும், கிருஷ்ணசாமி அஸோஸியேட்ஸ் ஒரு சேனலுக்கும், ராஜ் டிவி நிறுவனம் ராஜ் டிவி ஏசியா எனும் சேனலுக்கும், விஜயாந்தி, பவித்தர் என்டர்டெய்ன்மெண்ட்ஸ், அனோலி ஹோல்டிங்கஸ், மற்றும் வேதிக் பிராட்காஸ்டிங் போன்ற நிறுவனங்கள் தலா ஒரு சேனலுக்கும் விண்ணப்பித்திருந்தன. இவற்றுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு கடந்த ஜூலை 15-ம் தேதிக்குள் அப்லிங்கிங் கட்டணம் செலுத்த கெடு விதித்திருந்தது.


Click it and Unblock the Notifications