கருணாநிதி படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!
முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் நீயின்றி நானில்லை படத்தின் தலைப்பு மற்றும் இயக்குனர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி முருகேசன் தயாரிக்கும் இந்தப் படம் கருணாநிதி முன்பு எழுதிய சுருளி மலை எனும் கதையைத் தழுவி உருவாகிறது. படத்தின் திரைக்கதையை கருணாநிதியே எழுதியுள்ளார்.
மீரா ஜாஸ்மின், உதய் கிரண், விவேக், மனோரமா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் நீயின்றி நானில்லை என்று பெயர் சூட்டப்பட்டது. உளியின் ஓசை படத்தை இயக்கிய இளவேனில் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதன் துவக்கவிழா மிகப் பிரமாண்டமாக கருணாநிதி தலைமையில் சில வாரங்களுக்கு முன் நடந்தது.
படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், இதன் இயக்குநர் இளவேனி்ல் மாற்றப்பட்டுள்ளார். இப்போது பாலி ஸ்ரீரங்கம் என்பவர் இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
படத்தின் தலைப்பையும் 'பெண் சிங்கம்' என மாற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











