twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றி விழா: ரஜினியை சம்மதிக்க வைத்த உதயநிதி!

    By Shankar
    |

    உதயநிதி ஸ்டாலின் நடத்தும் 4 படங்களின் வெற்றி விழாவில் பங்கேற்க ஆரம்பத்தில் மறுத்த ரஜினி, பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி வெளியிட்ட 4 படங்களின் வெற்றி விழா, சென்னையில் மே 7-ந் தேதி, ரஜினிகாந்த் தலைமையில் நடக்கிறது.

    கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது 7-ம் அறிவு என்ற படத்தை தயாரிப்பதுடன், ராஜேஷ் எம். இயக்கத்தில், ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

    இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் வெற்றி பெற்றg 100 நாட்கள் ஓடின.

    இந்த 4 படங்களின் வெற்றி விழாக்கள், ஏப்ரல் 22ம் தேதி நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்றும் அறிவித்திருந்தனர்.

    ஆனால் தேர்தல் நாளன்று ரஜினி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், பொதுநிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்தார் ரஜினி. சிரஞ்சீவி மகன் நிகழ்ச்சியும் இதனால் தள்ளிப் போடப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த வெற்றிவிழாவும் இதனால் தள்ளிப் போனது. இப்போது இரு வாரங்கள் கழித்து, மே 7ம் தேதி விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த விழாவுக்கு தலைமை தாங்கி, கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்துள்ளார்.

    மே மாதம் 7-ந் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது இந்த விழா. தமிழ் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

    English summary
    Udayanidhi Stalin will be hosting a grand function to celebrate the success of his four films Vinnaithaandi Varuvaya, Boss Engira Bhaskaran, Madarasapattinam and Myna with the Superstar. Yes, Finally Rajinikanth accepted to distribute the shields to the artists of all the four films on May 7th at Nehru Indoor Stadium, Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X