மீண்டும் சென்னை - 28!

பொதுவாக ஒரு படம் வென்றால், அந்தப் பாணியிலேயே ஏராளமான படங்கள் வரும். பின்னர் வேறு படம் வென்றால், அந்தப் பாணியை பின்பற்றுவார்கள். இதுதான் கோலிவுட் வழக்கம்.
ஆனால் சென்னை 28-ன் பாணியில் மட்டும் யாரும் இன்னொரு படத்தை முயற்சிக்கவில்லை. காரணம் இந்தப் படத்தை உருவாக்கிய குழு. கிட்டத்தட்ட ஒரு 'மியூசிக் பேண்ட்' மாதிரி, மீண்டும் இவர்களால் மட்டுமே இதுபோன்ற ஒரு படத்தை (ஆங்கிலப் படங்களிலிருந்து காட்சிகள் உருவப்பட்டிருந்தாலும்!) தர முடியும் எனும் அளவு அமைந்துவிட்ட படம் இது.
இப்போது இந்த சென்னை 28-படத்தின் இரண்டாம் பகுதியைத் தரும் திட்டத்திலுள்ளனர் வெங்கட் பிரபு, சரண் கூட்டணி.
கோவா படத்துக்குப் பிறகு அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுக்காக ஒரு படம் இயக்கித் தரும் வெங்கட் பிரபு, அதற்கடுத்து சென்னை 28ன் தொடர்ச்சியை இயக்குகிறார்.
இதற்கிடையே அஜீத் படத்தை இயக்குவதாக இருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட வெங்கட், டி சிவாவின் படத்துக்கு ஒரு பெரிய நடிகரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











