தெய்வத் திருமகன் ஆனது விக்ரமின் தெய்வமகன்!
விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் கைவண்ணத்தில் உருவாகி வரும் படத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அனுஷ்கா, அமலா பால் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பிதா. இந்தப் பெயர் வேண்டாம் என்று பின்னர் முடிவு செய்து, தெய்வ மகன் என்று தலைப்பிட்டனர்.
ஆனால் இந்தப் பெயரில் படமெடுக்க சிவாஜி பிலிம்ஸ் முடிவு செய்திருப்பதாக பின்னர் தெரிய வந்துள்ளது. அந்த தலைப்பின் உரிமையும் சிவாஜி பிலிம்ஸ் வசமே இருப்பதால், வேறு பெயர் சூட்ட யோசித்து வந்தனர்.
இப்போது, தெய்வத் திருமகன் என்ற பெயரைத் தேர்வு செய்து, முடிவாக அறிவித்துள்ளனர்.
ராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நியனுக்குப் பிறகு வழக்கமாக விக்ரம் படங்கள் முடிய ஆண்டுக்கணக்கில் ஆகும். ஆனால் முதல்முறையாக நான்கே மாதங்களில் இந்தப் படத்தை முடித்து விக்ரமுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார் இயக்குநர் விஜய்!


Click it and Unblock the Notifications











