twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாதி முகமூடியை நாடும் விவேக்!

    |

    Vivek receiving Padmashri Award from President Pratibha Patil
    திரையில் காமெடியனாக வந்து 'சாதியில்லை, மதமில்லை, சாமியில்லை' என்று வீராவேசமாக தத்துவங்களை துப்பித் தள்ளும் விவேக் தனது பிரச்சனைக்கு சாதியை இழுத்து தப்ப முயன்று வருகிறார்.

    உபதேசம் பண்ணும் இவருக்குள் இத்தனை வில்லங்கமா? என்று பலரையும் புருவம் உயர வைத்துள்ளது அவர் சமீபத்தில் செய்துள்ள ஒரு காரியம்.

    சமீபத்தில், "பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடர்கிறார்கள். பத்மஸ்ரீ விருதினை திரும்பப் பெற வைக்க சூழ்ச்சி செய்கிறார்கள். எனக்கு ஒரு அவமானம் என்றால் அது நான் சார்ந்த சாதிக்கே நேர்ந்த அவமானமல்லவா... எனக்காக நீங்கள் எல்லாம் களமிறங்க வேண்டும். ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டும்" என்று முழங்கியிருக்கிறார்.

    அவர் முழங்கியிருப்பது, டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில். பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் எதிரொலிதான் விவேக்கின் இந்தப் புலம்பல்.

    அப்போதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்த சேதுராமன், தனிப்பட்ட முறையில் யாராவது வழக்கு தொடர்ந்தால் தனது கட்சி சார்பில் குரல் கொடுப்போம் என்று கூறி அனுப்பினாராம். அதேநேரம், ஒட்டு மொத்த நடிகர்கள் மீதும் வழக்கு என்று வந்தால் அதில் நாம் தலையிடக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு கூறிவிட்டாராம்.

    சுதந்திரப் போராட்டத்தின்பேது சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் தேசத்துக்காக பெரும் தொண்டாற்றியவர்கள் முக்குலத்தோர் சமூக மக்கள்.

    அப்படிப்பட்ட சமூக மக்களை தேவையில்லாமல் தனது சொந்தப் பிரச்சனையில் இழுத்து விட முயன்று வருகிறார் விவேக்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X