ரிசார்ட் அதிபரான ராஜேஷ்!

நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் ராஜேஷ். அதன் பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் வெற்றிகரமாக கால் பதித்தவர். தற்போது 80 அதி நவீன அறைகள் கொண்ட ரிசார்ட் ஒன்றையம், 200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான ஹோட்டல் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.
ஈஸ்ட்-வெஸ்ட் ரிசார்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரிசார்ட், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், 34 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது.
தொடக்க விழாவில் ராஜேஷ் பேசுகையில், இந்த ரிசார்ட்டில் பல வசதிகள் உள்ளன. நீச்சல்குளம், ஜிம், கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஐந்து நட்சத்திர பார் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மேலும் இந்த ரிசார்ட் வளாகத்தில் அழகிய ஏரி ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அரசிடமிருந்து இதை குத்தகைக்கு எடுத்துள்ளோம். இங்கு படகு சவாரி மற்றும் மீன் பிடிப்பது போன்றவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
சாதாரண நடுத்தர வர்க்கத்தினருக்கும் பொருத்தமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்ப அறைகளின் வாடகை ஒரு நாளைக்கு ரூ. 1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஈஸ்ட்வுட்ஸ் பார்பிக் அமைந்துள்ளது.
சாப்ளின்ஸ் பார், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்களுக்கு நிகரானவை. அனைத்து வகையான வெளிநாட்டு ஒயின், உலகின் தலை சிறந்த பீர் வகைகள், சாம்பெயின், மது வகைகள் இங்கு கிடைக்கும்.
திரைப்பட ஷூட்டிங்குக்கு இந்த ரிசார்ட் மிகப் பொருத்தமானதாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் படப்பிடிப்புகளை நடத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
கோரமண்டல் கிளப்பின் நிறுவனரான பிரடெரிக் ஜேம்ஸ், இந்த ரிசார்ட்டின் பங்குதாரர்களில் ஒருவர் ஆவார்.


Click it and Unblock the Notifications











