திரும்ப திரும்ப தொலைக்கும் அமிதாப்!

By Staff

Amitabh Bachchan
19வது முறையாக தனது லக்கேஜுகளை தொலைத்து புதிய சாதனை படைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

வெளியூருக்குப் போகும்போது தாங்கள் கொண்டு செல்லும் சாமான்களை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தொலைத்து விடும் பழக்கம் பலருக்கு உண்டு. அது அமிதாப்புக்கு கிட்டத்தட்ட ஒரு நோய் போல ஆகி விட்டது.

தனது வெளிநாட்டு பயணங்களின்போது லக்கேஜ்களை தொலைப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார் அமிதாப்.

மறக்க முடியாதசுற்றுப்பயணம் என்ற ெபயரில் பாலிவுட் குழுவினருடன் (மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா உள்பட) வட அமெரிக்க பயணத்தில் உள்ளார் அமிதாப்.

அதன் ஒரு கட்டமாக டொரோண்டோவிலிருந்து டிரினிடாட்டுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- எனது பொருட்களில் பாதியை மீண்டும் காணவில்லை. இந்தமுறை பிரிட்டிஷ் ஏர்வேசில் காணாமல் போகவில்லை. ஆனால் ஏர் கனடாவில் காணாமல் போயிருக்கிறது - என்று அவர் கூறியுள்ளார். ஏர் கனடாவில் தொலைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸிலும் லக்கேஜை தொலைத்திருந்தார் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணம் செய்த போது, தாம் அணிந்திருந்த ஆடையுடன் மட்டுமே தாம் தங்கியிருந்த இடத்துக்கு செல்ல நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துக்கு என்னையோ அல்லது எனது பொருட்களையோ மிகவும் பிடித்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாம் கொண்டு சென்ற பொருட்களில் சில சட்டைகள் மற்றும் பேண்டுகளை காணவில்லை என்றும், இதனால் அணிந்திருந்த ஜீன்ஸ் மற்றும் சட்டையுடனே படுக்க வேண்டியிருந்ததாகவும், தனது வலைப்பதிவில் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி லக்கேஜை தொலைப்பது அமிதாப்புக்கு இது 19வது முறையாகும். ஞாபக மறதியால்தான் இந்த தொல்லை என்று கூறும் அமிதாப், எல்லோருக்கும் என் மீது பாசம் இருக்கும். அதற்காக எனது லக்கேஜையும் பத்திரமாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாதே என்று சிரித்தபடி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X