யார் அடுத்த பிரபுதேவா?

By Staff

Gayatri in Vijay TV - Amul Ungalil Yaar Adutha Prabhudeva
வித்தியாசமான விஜய் டிவியின் அடுத்த வித்தியாசமான நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி ஆரவாரமாக தொடங்கியுள்ளது.

வித்தியாசமான ஷோக்கள் மூலம் டிவி நேயர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள விஜய்டிவியின் இன்னும் ஒரு இனிமையான அனுபவம் அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.

இந்த வித்தியாசமான இளம் நடனப் புயல்களை அடையாளம் காணும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ, நேற்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

16 வயதுக்கு மேற்பட்ட இளம் நடனக் கலைஞர்களின் திறனை கண்டறிந்து வெளிக்கொணர்ந்து அவர்களை வெற்றி பெற வைக்கவும் விளையும் நிகழ்ச்சி இது. இந்த இளம் நடனக் கலைஞர்களின் திறமையை முன்னணி நடனக்கலைஞரான பிரபுதேவா மதிப்பிட்டு தேர்வு செய்யவுள்ளார்.

தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, நிறைய பாராட்டப்பட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் வடிவமைத்துள்ள நடனப் புயல் பிரபு தேவா.

இந்த நிகழ்ச்சிக்கான முதல் கட்ட தேர்வுப் போட்டிகள் திருச்சி, கோவை, மதுரையில் நடைபெற்றன. டான்ஸ் மாஸ்டர்கள் ஸ்ரீதர் மற்றும் மேஜர் சுந்தரராஜனின் மகன் கெளதம் ஆகியோர் திருச்சி, கோவை மண்டல தேர்வுப் போட்டிக்கான நடுவர்களாகப் பணியாற்றினர்.

நடிகை தேஜாஸ்ரீ மற்றும் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் மதுரை மண்டல தேர்வுக்கு நடுவர்களாக இருந்தனர்.

மொத்தம் 600 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த தகுதிச் சுற்றிலிருந்து, திருச்சியிலிருந்து 23 பேரும், கோவையிலிருந்து 27 பேரும், மதுரையிலிருந்து 20 பேரும் அடுத்த சுற்றுக்கு தேர்வானார்கள்.

இதைத் தொடர்ந்து சென்னையில் ஆகஸ்ட் 16ம்தேதி 2வது கட்ட தகுதிப் போட்டி நடந்தது. மொத்தம் 1500 பேர் கலந்து கொண்டனர். இவர்களிலிருந்து 280 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு தேர்வாகப் போகிறவர்களை திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவரும், மாஸ்டர் ஸ்ரீதரும் தேர்வு செய்யவுள்ளனர்.

இறுதியாக அனைத்து மண்டலங்களிலிருந்தும் தேர்வாகும் போட்டியாளர்கள் விதம் விதமான நடனப் போட்டிகளில கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதில் வெற்றி பெறுபவருக்கு பட்டத்துடன், ரூ. 10 லட்சம் பரிசும் காத்திருக்கிறது.

இப்போட்டியின் நடுவர்களாக திரையுலகம் மற்றம் நடன உலகைச் சேர்ந்த பிரபலங்கள் செயல்படவுள்ளனர்.

கலக்கப் போவது யாரு புகழ் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அடுத்த நடனப் புயல் யார் என்பதை காண தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X