திமுக வேட்பாளர் ரித்தீஷுக்கு பிடிவாரண்ட்-முன்ஜாமீன் கிடைத்தது

By Staff

Rithish
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் குரு பூஜை விழாவின்போது மோதலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரித்தீஷுக்கு கமுதி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

பசும்பொன்னில் கடந்த ஆண்டு நடந்த தேவர் குருபூஜை நிகழ்ச்சியின்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மகனும், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியச் செயலாளருமான ஆனந்த் மற்றும் அவரது குழுவினருக்கும், ரித்தீஷ் குரூப்புக்கும் இடையே அபிராமம் அருகே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரித்தீஷ் தரப்பைச் சேர்ந்த 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவர்களில் 36 பேர் முன்ஜாமீன் பெற்று விட்டனர்.

ரித்தீஷ் மட்டும் ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் உத்தரவை வாங்கி பிணை கொடுக்காமல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து ரித்தீஷை தலைமறைவு கைதியாக கருதி அவருக்கு கமுதி கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி ரித்தீஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை ரித்தீஷுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ரித்தீஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X