வாரணம் ஆயிரம் - வாங்கினார் அழகிரி மகன்!

By Staff

Vaaranam Aayiram movie still
வாரணம் ஆயிரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அழகிரியின் மகன் தயாநிதி வாங்கியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் அடுத்தடுத்து கோலிவுட்டில் குதித்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் நுழைவது புதிதல்ல.

ஏற்கெனவே, மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி குருவி படம் மூலம் பிரமாண்ட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு பூஜை போடப் போகிறார். இவரைத் தொடர்ந்து கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி பெருமாள் படம் மூலம் பாடகராக மாறியுள்ளார்.

இப்போது அழகிரியின் மகன் தயாநிதியும் களத்தில் குதித்துள்ளார். ஏற்கெனவே அழகிரி திரைப்படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தயாநிதி புதிதாக க்ளௌட் நைன் மூவீஸ் எம் என்ற புதிய திரைப்பட நிறுவனம் தொடங்கியுள்ளார்.

புதிய படங்களின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட முடிவு செய்துள்ள இந்நிறுவனம் முதல் படமாக கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா- சமீரா ரெட்டி - சிம்ரன் நடித்துள்ள வாரணம் ஆயிரம் படத்தை வாங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X