ரியாலிட்டி ஷோ-குழந்தைகள் பங்கேற்க தடை!

இப்படி அதிரடியாக பரிந்துரை செய்துள்ள அமைப்பு, மத்திய அரசின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்.
டிவி சேனல்களில், பார்வையாளர்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இசை, நடனம், பேச்சுப்போட்டி உட்பட பல வித போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அவற்றில் பங்கேற்கும் 16 வயதுக்கு உட்பட்ட சிலர் தோல்வி அடையும் போது, மன வருத்தம் அடைகின்றனர், சிலர் மேடையிலேயே கதறி அழுகின்றனர்.
இப்படி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால், அவர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் ஷின்ஜினி என்ற பெண் மேடையில் மயங்கி விழுந்தாள். இன்னொரு டிவி ஷோவில் ஒரு பெண் தற்கொலை முயற்சி செய்தார். இப்படி அடிக்கடி சம்பவங்கள் நடந்து வருவதை அடுத்து, குழந்தை நல பாதுகாப்பு அமைப்புகள், மத்திய அரசிடம் முறையிட்டன.
எனவே இதற்கான மாற்று வழிகளை மத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு கமிஷன் ஆராய்ந்து வந்த்து. இதுகிறித்த தன் பரிந்துரை அறிக்கையை நேற்று முன்தினம் மத்திய அரசிடம் அளித்தது.
அந்த பரிந்துறைகளில் சில:
ரியாலிட்டி ஷோக்களில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இனி பங்கேற்கக்கூடாது.
இனி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு தரக் கூடாது. அத் தொகையை எதிர்கால கல்விக்கு பயன்படும் வகையில் நிரந்தர வைப்புத் தொகையாக வங்கியில் போட்டு அந்த பத்திரத்தை பரிசாக தர வேண்டும்.
நீண்ட நேரம் மேடையில், பிரகாசமான விளக்கொளியில் குழந்தைகளை நிற்க வைக்கக் கூடாது.
குழந்தைகள் மனம் வருந்தும் விதத்தில் நடுவர்கள் கருத்து சொல்லக் கூடாது. கடுமையான விமர்சனத்தையும் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பரிந்துரைகள் இப்போதைக்கு 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் இந்த வயது வரம்பை 12 ஆக குறைக்கலாம்' என்றும் ஒரு யோசனை உள்ளதாம்.
16 வயது வரையுள்ளவர்கலை சிறுவர்கள் பிரிவில் சேர்க் வேண்டாம் என்றும், ஓரளவு சிந்திக்கும் திறனுடன் அவர்கள் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகலை வெல்வது பெற்றோருக்கும் அவர்களது எதிர்காலத்துக்கும் உதவியாக இருக்கும் என்றும் சில பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கையால் இந்த மறுசீலனைக்கு அரசு முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











