'அடி ஆத்தாடீ'... ரீமிக்ஸ்!

By Staff

Sathyaraj with Rekha in Kadalora Kavithaigal
இசைஞானியின் இன்னிசையில் உருவாகி இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் கடலோரக் கவிதைகளில் இடம் பெற்ற அடி ஆத்தாடீ என்ற சூப்பர் ஹிட் பாடல் ரீமிக்ஸ் ஆகியுள்ளது.

பாரதிராஜாவின் சிஷ்யர் அன்பு. இவர் இப்போது இயக்குநராகியிருக்கிறார். மிட்டாய் என்ற படத்தை இவர் இயக்கி அறிமுகமாகிறார். இப்படத்தின் போஸ்டரே சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மிட்டாய் படத்தில் இரு நாயகர்கள். புதுமுகங்களான சந்தோஷ், பிரபா ஆகியோருடன் நாயகியாக அறிமுகமாகிறார் கேரளத்து ஜில்ஜில் அழகியான மாயா உன்னி.

மாயலோகத்தின் மச்சக் கன்னி போல படு அம்சமாக இருக்கும் மாயா உன்னி, இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிப்புக் கோலம் போட வருகிறார்.

படத்தின் விசேஷமே பாரதிராஜா டச்தான். படத்தை இயக்குவதோடு தயாரிக்கவும் செய்கிறார் அன்பு. குருநாதர் பாரதிராஜாவின் படத்துடன் பி டீம் பிளேயர்ஸ் என பெயரிட்டுள்ளார் அன்பு.

சபேஷ் முரளியின் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் கடலோரக் கவிதைகளில் இடம் பெற்ற அடி ஆத்தாடீ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனராம்.

ஒரிஜினல் பாடலின் ஜீவன் கெடாத வகையில் ரீமிக்ஸ் செய்துள்ளோம் என்கிறார் அன்பு.

அப்ப, மறுபடியும், ஜெனீபர் டீச்சர் கடற்கரையில் ஓடப் போகிறார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X