ஷபானாவுக்கு சத்ருகன் கண்டனம்

ஷபானாவின் இக் கருத்துக்கு பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற தனது கருத்தை, ஷபானா ஆஸ்மி திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தால், மும்பையில் பிளாட் கூட வாங்க முடியவில்லை என குறைபட்டுள்ளார் ஷபானா. இந்தக் கூற்று தவறானது.
ஷபானா ஆஸ்மி மட்டுமின்றி, திலீப்குமார் (எ) யுசுப் கான், சுரைய்யா, வகிதா ரகுமான், ஷாரூக் கான், அமீர் கான், சல்மான் கான் போன்ற பல முஸ்லிம் நடிகர்களுக்கும் ரத்தின கம்பள வரவேற்பை ரசிகர்கள் அளித்து வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.
அரசியல்ரீதியாக எந்த முஸ்லிமும் புறக்கணிக்கப்படுவதில்லை. காரணம் இந்திய மக்களாட்சி அனைவருக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.
முஸ்லிமாக இருப்பதால், மும்பையில் பிளாட் வாங்க முடியவில்லை என்று கூறும் ஷபானா ஆஸ்மி, ஆடம்பரமான பங்களாவில் தற்போது எப்படி வசித்து வருகிறார்.
நடிகர்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும், மத ரீதியாக அவர்களைப் புறக்கணிக்கும் பழக்கம் நம்மிடையே இல்லை. தவறாகப் பேசிய ஆஸ்மி, தன் கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











