ஜக்குபாய் ஆடியோ ரெடி!

By Staff

Jaggubhai
சரத்குமார் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே படம் ஜக்குபாய். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற செப்டம்பர் 27ம் தேதி கருணாநிதி தலைமையில் நடக்கிறது.

ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியாவும், ஜீ டிவியும் இணைந்து தயாரித்துள்ளன இந்தப் படத்தில் சரத் குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இந்தப் பட ஆடியோ வெளியீட்டுக்கு தேதி வாங்க கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.

நீண்டகாலம் திமுகவில் இருந்தவர் சரத் குமார். திமுக ராஜ்ய சபா எம்பியாகவும் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து, அதிலிருந்தும் விலகி தனிக் கட்சி கண்டவர்.

அரசியலில் பெரிய ப்ரேக் எதுவும் கிடைக்காத நிலையில், சினிமாவில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். முதல்வரும் உடனடியாக இந்த விழாவுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆடியோ வெளியீடு அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில்தான் நடக்கிறது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முன்பு நடிப்பதாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. விளம்பரமெல்லாம் வெளியாகி படப்பிடிப்பு துவங்கவிருந்த சூழலில் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ரஜினியே நடிக்கவிருந்த கதை என்பதால், தனதுக்கு பெரிய வெற்றியைத் தரும் என்று தீவிரமாக நம்புகிறார் சரத்.

நம்பிக்கை பலிக்கட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X