தீ படத்தில் போலீஸ்-வக்கீல் கலவர காட்சி!

By Staff

Sundar C with Namitha
எந்த ஒரு பரபரப்பான சம்பவமாக இருந்தாலும், அதை மையப்படுத்தி சினிமா எடுப்பது அல்லது எடுத்த சினிமாவில் அதைச் சேர்த்துக் கொள்வதுதான். இந்த ஒரு வார காலமாக பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழக போலீஸ் - வக்கீல் காட்சியை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

இதோ... சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரித்து வெளியிடும் தீ படத்தில் இந்தக் காட்சியும் இடம் பெறுகிறதாம்.

ஆரம்பத்திலேயே இது போன்ற ஒரு காட்சியை எடுத்துவிட்ட படத்தின் இயக்குநர் கிச்சா, இப்போது நடந்த கலவரங்களைப் பார்த்த பிறகு, 'அடடா நாம எடுத்த சினிமா காட்சிகளையே மிஞ்சிடுச்சே' என்று யோசித்து, புதிதாக நிஜ கலவரத்துக்கு இணையான காட்சிகளை எடுக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

சமூகத்தின் காவலர்களான காவல் துறையும் போலீசும் கடமை தவறினால் என்னாகும் என்பதே இந்தப்படம், என்கிறார் இயக்குநர் கிச்சா.

சன் பிக்சர்ஸ் வழங்க, ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் தீ. சுந்தர்.சி., ராகிணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் சி நாயகன் என்றாலும் படத்தில் முக்கிய மூலதனம் நமீதாதான். அவரது கவர்ச்சி இந்தப் படத்தில் ஃபயர் மாதிரி இருக்குமாம். அதனால்தான் படத்துக்கு தீ எனப் பெயர் சூட்டினார்களா என்றால், 'படத்தோட வேகம் தீ மாதிரி செம ஸ்பீடு.. அதனால்தான் தீ எனப் பெயர் வைத்தோம், என்கிறார் கிச்சா. 27ம் தேதி ரிலீசாகிறது இந்தப் படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X