எச்ஐவி: கை கோர்க்கும் கிரிக்கெட், சினிமா

சென்னை தாஜ்கன்னிமாரா ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவியுடன் வாழும் மக்களுக்கு தங்களது ஆதரவை இந்த நிகழ்ச்சியின்போது வீரர்களும், திரை நட்சத்திரங்களும் தெரிவிப்பர்.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களையும் திரை நட்சத்திரங்கள் சந்தித்து உரையாடுவார்கள்.
கிரிக்கெட் வீரர்கள் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட பேட், எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகையும், டிவி தொகுப்பாளருமான அனுஹாசன் தொகுத்து வழங்குவார்.
Comments


Click it and Unblock the Notifications