தசாவதாரம்-கண்கவர் இன்விடேஷன்!

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பிரமாண்டப் படைப்பான தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 25ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. விழா அழைப்பிதழை படு வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். எல்பி டிஸ்க் வடிவில் அழைப்பிதழ் அமைந்துள்ளது. சிறப்பு விருந்தினர்களின் பெயர்கள், படத்துடன் இடம் பெற்றுள்ளன.
முதல்வர் கருணாநிதி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். ஜாக்கிசான் ஆடியோவை வெளியிட, சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சனும், மம்முட்டியும் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கின்றனர்.
விழாவில் கமல்ஹாசன், விஜய், ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஹிமேஷ் ரேஷமய்யா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications