twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் கதைத் திருட்டு விவகாரம்-எழுத்தாளர் அமுதா தமிழ்நாடன் நேரில் ஆஜராகி போலீஸில் விளக்கம்

    By Sudha
    |

    Aishwarya Rai and Rajinikanth
    எந்திரன் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்துள்ள எழுத்தாளர் அமுதா தமிழ்நாடன் இன்று போலீஸில் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை விரிவாக ஆதாரங்களுடன் அளித்தார்.

    எந்திரன் படத்தின் கதை தங்களது படைப்பிலிருந்து திருடப்பட்டது என்று எழுத்தாளர்கள் அமுதா தமிழ்நாடன், ஆர்னிகா நாசர் ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இவர்களில் அமுதா தமிழ்நாடன் ரூ. 1 கோடி இழப்பீடு கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இனிய உதயம் பத்திரிக்கையில் தான் எழுதிய கதையைத்தான எந்திரன் என்ற பெயரில் சினிமாத்தனங்களை சேர்த்து படமாக்கி விட்டார் ஷங்கர் என்பது தமிழ்நாடனின் புகார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மத்திய குற்றப் பிரிவின் திருட்டு வீடியோ பிரிவு தான் இதை விசாரித்து வருகிறது.

    இதுகுறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடனுக்கு சம்மன் போனது.

    22.11.2010 அல்லது 23.11.2010க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு உத்தரவிட்டது. ஆனால் ஷங்கர் இதுவரை ஆஜராகவில்லை. இந்தநிலையில் தமிழ்நாடன் தனது வக்கீல்கள் சிவக்குமார், எட்வின் ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது 1996ல் ஏப்ரல் மாத "இனிய உதயம்' இதழில் வெளியான ஜுகுபா கதையின் புத்தக பிரதியை ஒப்படைத்தார். அப்போது போலீசாரின் சில கேள்விகளுக்கும் ஆரூர் தமிழ்நாடன் விளக்கம் அளித்தார். அப்போது தனது தரப்பு ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்ததாக தெரிகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X