சைக்கோ ஆசாமி ஹீரோவாகிறான்!

ஆட்டோ சங்கர், ஜெயப்பிரகாஷ், வீரப்பன் வரிசையில் இதோ இப்போது இன்னொரு நெகடிவ் ஹீரோவை உருவாக்குவதில் இறங்கிவிட்டார்கள்.
சென்னையில் காவலாளிகளை எரித்துக் கொன்று வரும் மர்ம சைக்கோ ஆசாமிதான் கதையின் நாயகன்!
ரங்கீலா எண்டர்பிரைசஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்துக்கு தூய தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மற்ற இரு மொழிகளிலும் சைக்கோ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
ஆக்ரா படத்தை இயக்கிய சித்திரைச் செல்வன் இப்படத்தின் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். தஷி இசையமைக்கிறார்.
சைக்கோ பாத்திரத்தில் நடிக்க பிரபலமான வில்லன் ஒருவருடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்தப் படம் குறித்து முழு தகவலும் வெளியாகும் என்கிறார் படத்தின் பிஆர்ஓ ஜி.பாலன்.
படம் பார்த்துட்டு நிறைய சைக்கோக்கள் கிளம்பாம இருந்தா சரி!


Click it and Unblock the Notifications











