தமிழில் 'கல்லறை உலகமாக' வெளியாகும் ' ப்ரீஸ்ட் '

இந்தப் படத்தில் பால் பெட்டனி, காமி கிகன்டட், மேகி, கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்காட் ஸ்டூவர்ட் இயக்கியுள்ள இது ஒரு திகில் ஆக்ஷன் படம். மனித இனத்திற்கும், ரத்தக்காட்டேரி போன்ற தீயசக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை.
இதில் தீயசக்திகள் மனதர்களை கொடுமைப்படுத்துகின்றன. பாதிரியார் ஒருவரின் மருமகளையும் தீயசக்திகள் கடத்துகின்றன. மனித இனத்தை தீயசக்திகளிடம் இருந்து மீட்க ஒருவன் வருகிறான். அவன் தீயசக்திகளை அடக்கினானா என்பது தான் கிளைமாக்ஸ்.
மனிதர்களுக்கும், ரத்தக்காட்டேரிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் படமாக்கியுள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் வெளி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications