'மாளவிகா'-தயாரிப்பாளர் வழக்கு?!

கர்ப்பிணியான தன்னிடம், படத்தில் நடிக்கும் போது தயாரிப்பாளர் முறைகேடாக நடந்துகொண்டார் என்றும், வயிற்றில் கைவைத்து செக்ஸுக்கு அழைத்தார் என்றும் பகீர் குற்றாச்சாட்டுகளை நேற்று சுமத்தியிருந்தார் நடிகை மாளவிகா.
இதுகுறித்து நடிகர் சங்கத்திலும் புகார் செய்திருந்தார். இதேபோல, தயாரிப்பாளர் சங்கத்தில் மாளவிகா மீது ஆஞ்சநேயலு புகார் செய்துள்ளார்.
இந் நிலையில் நஷ்ட ஈடு கேட்டு மாளவிகா மீது வழக்குத் தொடர ஆஞ்சநேயலு முடிவு செய்துள்ளார்.
மாளவிகா என் படத்தில் நடிக்காமல் போனதால் எனக்கு இழப்பு ரூ.75 லட்சம். இது போதாதென்று என் பெயரை வேறு டேமேஜ் செய்துவிட்டார். வருகிற ஜூலை 1-ம் தேதிவரை அவருக்குக் கெடு விதிக்கிறேன். அதற்குள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டால் விட்டுவிடுவேன். இல்லையேல், நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப் போகிறேன்.
ஒரு பெண் என்பதால் அவர் கூறும் எல்லா பொய்க் குற்றச்சாட்டுகளையும் பத்திரிகைகள் அப்படியே போட்டு விடுகின்றன. என்ன நடந்திருக்கும் என்பதை யோசிக்கக் கூட தயாராக இருப்பதில்லை.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் அளவுக்கு காமவெறியனா நான்.. என்னமோ இப்போதுதான் முதல்முறையாக நான் திரைப்படத் தயாரிப்புக்கு வந்ததைப் போலப் பேசுகிறார்கள். இரண்டு சில்வர் ஜூப்ளி படம் கொடுத்தவன் நான். எனக்கு இந்த திரையுலம் பற்றி நன்கு தெரியும்... என்றார்.
பஞ்சாயத்தை சீக்கிரமா முடிங்க...


Click it and Unblock the Notifications











