புது நடிகைகள் 'எல்லை தாண்டக் கூடாது'! - ராதா அட்வைஸ்

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிவாஜி, ரஜினி, கமல் என சாதனை நாயகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இப்போது அவர் மகள் கார்த்திகா 'கோ' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
சென்னையில் கோ பட இசை வெளியீட்டில் பங்கேற்ற ராதா, நேற்று திருப்பதி கோவிலுக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் பிஸினஸில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள்.
மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறாள். தெலுங்கில் ஜோஷ் படத்தில்தான் அறிமுகமானாள். இப்போது கோ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறாள்.
என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.
அப்போது எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது என் மகள் வயதுள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
புதிய நடிகைகளுக்கு அட்வைஸ் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகைகளுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த குணம் சினிமாவில் உதவாது. புதிய நடிகைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டாமல் இருப்பது இங்கு முக்கியம்.
பத்து படங்களில் நடித்தும் கூட நான் பயத்துடன்தான் இருந்தேன்.
நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம்," என்றார்.


Click it and Unblock the Notifications











