சல்மான் படத்துக்கு குவைத் தடை!

இஸ்லாமின் போதனைகளுக்கு முரண்பாடாக இப்படம் இருப்பதால் இதை திரையிட அனுமதிக்க முடியாது என குவைத் செய்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிம் கேரி -மார்கன் ப்ரீமேன் நடித்த ஹாலிவுட் படமான புரூஸ் அல்மைட்டி படத்தைத்தான் இந்தியில் காட் துஸ்ஸி கிரேட் ஹோ என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். புரூஸ் அல்மைட்டி சில காட்சிகளை வெட்டி விட்டு துபாயில் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் குவைத்தில் அப்படம் தடை செய்யபப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சல்மான் படத்தைத் தடை செய்தது. தற்போது குவைத்தும் தடை செய்து விட்டது.
இருப்பினும் இப்படத்தின் டிவிடிக்கள் அரபு நாடுகளில் பரவலாக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications