ஸ்பெஷல் எபெக்ட்ஸ் துறையில் 'லேகா'!

By Staff

பின்னணி இசைச் சேர்ப்புக்கு தனி ஸ்டுடியோவை வைத்துள்ள ஜெர்மனியின் லேகா சோனாட்டான் நிறுவனம், இப்போது சிறப்பு ஒலிச் சேர்ப்பு எனப்படும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சேர்ப்பு துறையிலும் கால்பதித்துள்ளது.

நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள ஏற்கெனவே உள்ள இதன் ஸ்டுடியோவிலேயே இந்த புதிய வசதியையும் செய்துள்ளனர்.

இதுகுறித்து இந்த நிறுவனத்தின் அகில இந்திய பொறுப்பாளர் மற்றும் நிர்வாகியான இயக்குநர் லேகா ரத்னகுமார் கூறியதாவது:

பின்னணி இசைச் சேர்ப்புக்கு சிறந்த ஸ்டுடியோ என்று குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கிவிட்டது லேகா சோனாட்டன் ஸ்டுடியோ.

இதில் பின்னணி இசை சேர்க்கப்பட்ட முதல் படம் பாக்யராஜ் அவர்களின் புதிய வார்ப்புகள் (சிந்து ப்ளஸ் ஒன் -பர்ஸ்ட் அட்டெம்ட்!).

அதற்குப் பின் பல்வேறு படங்களுக்கும் இங்கே இசைப்பதிவு நடந்துள்ளது. அதில் முக்கியமானது கண்களும் கவிபாடுதே படம். இந்தப் படத்தின் இயக்குநர் ஏஆர் ரமேஷ், பின்னணி இசையை முடித்துக் கொண்ட கையோடு, எங்களிடம் உள்ள ஸ்பெஷல் எபெக்ட்ஸ்களைப் பார்த்து பிரமித்துப் போய், இங்கேயே ஸ்பெஷல் எபெக்ட்ஸையும் சேர்த்துக் கொண்டார்.

இன்னும் பல படங்களுக்கும் கேட்டுள்ளார்கள். எம்ஜிஎம், டிஸ்னி என ஹாலிவுட் நிறுவனங்களின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ட்ராக்குகள் தொடங்கி, ஆயிரக்கணக்கான இயற்கை ஒலிகள் அடங்கிய ட்ராக்குகள் வரை இப்போது எங்கள் லைப்ரியில் தொகுத்து வைத்துள்ளோம். இங்கு கிடைக்காத சிறப்பு சப்தங்களே இல்லை எனும் அளவுக்கு கலெக்ஷன்கள் உள்ளன, என்றார் லேகா.

இனி இசைச் சேர்ப்பு, சிறப்பு ஒலி அமைப்பு, இசை அமைப்பு என எல்லாவற்றுக்கும் 'ஒன் ஸ்டாப் ஸ்டுடியோ' எனும் அளவுக்கு படுவேகத்தில் முன்னேறியுள்ளது லேகா சோனாட்டான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X