ரஜினிக்கு ஒத்துழைப்பு இல்லை: மதுரை தியேட்டர் உரிமையாளர்கள்

By Staff

Kuselan
மதுரை: குசேலன் படப் பிரச்சினைக்கு முடிவு காணும் வரை ரஜினிகாந்த், கே.பாலச்சந்தர், ஐங்கரன், விஜயக்குமார் ஆகியோருக்கு எந்தவித ஒத்துழைப்பும் அளிப்பதில்ைல என்று மதுரை, திண்டுக்கல் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

குசேலன் படப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மதுரையில், மதுரை, திண்டுக்கல் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் குசேலன் பட நஷ்டம் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. அதன் பின்னர் மதுரை மாநகர திரைப்பட உரிமையாளர்கள் சங்க செயலாளர்கள் குமரேசன், கஜேந்திரன், ராஜா பாரூக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 21 தியேட்டர்களில் குசேலன் திரையிடப்பட்டது. சாய்மீரா பட நிறுவனம், சிவாஜி படத்தை விட நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதனால், சிவாஜி படத்திற்குக் கொடுத்த விலையை குசேலனுக்கும் கொடுத்தோம்.

ஆனால் படம் அப்படி இல்லை, வசூலும் இல்லை. 50 சதவீதம் கூட வசூலாகவில்லை என்று சாய்மீரா நிறுவனத்திடம் முறையிட்டோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை எழுதித் தரும்படி கேட்டார்கள்.

ரஜினிகாந்த் குசேலன் படத்தில் தனது பங்கு 25 சதவீதம் கூட இல்ைல என்று கூறி விட்டார். வழக்கமாக ரஜினி படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆடம்பரத்தை, குசேலன் படத்திற்கு சற்று குறைத்துக் கொள்ளும்படி படம் வருவதற்கு முதல் நாள் அகில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா கூறினார்.

படம் சரியாக ஓடவில்லை என்று சென்னையில் உள்ள சாய்மீரா நிறுவனம், ரஜினிகாந்த், கவிதாலயா நிறுவனம், இயக்குநர் வாசு ஆகியோருக்கு கடிதம் எழுதினோம்.

ரஜினிக்கு அனுப்பிய கடிதம் ரிட்டர்ன்:

இதில் ரஜினிக்கு அனுப்பிய கடிதம் எங்களிடமே திரும்பி வந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், ரஜினிகாந்த் கவிதாலயா நிறுவனத்திற்கு ரூ 10 கோடியை கொடுத்து விட்டதாக ஒரு இணையதளத்திலும், 100 மில்லியன் டாலர் கொடுத்து விட்டதாக இன்னொரு இணையதளத்திலும் செய்திகள் வெளியாகியுள்ளன

ஆனால் சாய்மீரா நிறுவனத்திடம் கேட்டால், இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார்கள். பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கொடுத்துள்ள பணத்திற்கு படம் ஓடி முடியும் வரையிலான வசூலை வைத்து சதவீத அடிப்படையில், பணத்தை திருப்பித் தர வேண்டும்.

இல்லையென்றால், இனி வரும் காலத்தில் கவிதாலயா, ரஜினிகாந்த், விநியோகஸ்தர் ஐங்கரன் நிறுவனம், தயாரிப்பாளர் விஜயக்குமார் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்.

ஐங்கரன் ரோபோ படத்தை எடுக்கவுள்ளது. திருவண்ணாமலை என்ற படத்தையும் எடுத்து வருகின்றனர். இவற்றுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை சென்னையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது குசேலன் பட நஷ்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கூடி முக்கிய முடிவு எடுக்கவுள்ளனர்.

திருப்பூரிலும் போர்க்கொடி:

இதற்கிடையே, குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க இணைச் செயலாளர் ரத்தினசாமி கூறுகையில், குசேலன் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டமே இல்லை. எங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யாரும் தப்பிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அனைவருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தைத் திருப்பித் தருவது நல்லது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X