மறுபடியும் 'காக்கி' மம்முட்டி!

மம்முட்டி சூட்கேஸில் ரெடிமேடாக ஒரு போலீஸ் யூனிபாரம் இருக்கும் போல. அந்த அளவுக்கு போலீஸ் கேரக்டர்களில் அவர் அடிக்கடி நடித்து வருகிறார். இந்த நிலையில், 26வது முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கப் போகிறார் மம்முட்டி.
டாடி கூல் என்று பெயரிடப்பட்டுள்ள (மலையாளத்தில் மொழிச் சலுகை இன்னும் அறிவிக்கலையா அச்சு சேட்டா?) படத்தில், போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் மம்முட்டி. புதுமுகமான ஆஷிக் அபு இப்படத்தை இக்கப் போகிறார்.
அந்தோணி சைமன் என்பது மம்முட்டியின் கேரக்டர் பெயர். கிரைம் பிராஞ்ச் அதிகாரியாகவருகிறார். காவல்துறை அதிகாரி வேடத்தில் மம்முட்டி நடிக்கும் 26வது படம்.
இந்திரஜித், கலாபவன் மணி ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தின் நாயகி மற்றும் மம்முட்டியின் மகன் கேரக்டர்களுக்கு ஆட்களைத் தேடிக் கொண்டுள்ளனர்.
டிசம்பரில் ஷூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனராம்.
Comments


Click it and Unblock the Notifications