'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'!

60களில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினி பாட, சிவாஜி அவரை மறைந்திருந்து ரசிக்க, ஒலித்த பாடல்தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. கவியரசு கண்ணதாசனின் வைர வரிகள் இவை.
இன்று இப்பாடலின் முதல் வரி திரைப்படத்தின் டைட்டிலாகியுள்ளது. இப்படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். அவருக்கான ஜோடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பாடலில் மெய் மறந்தே அதை தனது படத்தின் டைட்டாலாக்கியதாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குநர். பாடலுக்குப் பெருமை சேர்க்கவே இந்த டைட்டில் மற்றபடி பாடலின் பெருமையைக் குலைக்கும் வகையில் படம் இருக்காது என்றும் முன்னெச்சரிக்கையோடு கூறுகிறார்.
படம் ஸ்டைலிஷாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்றும் முத்தாய்ப்பாக கூறினார் அவர்.
Comments


Click it and Unblock the Notifications