புதுப் பொலிவுடன் நீ பாதி நான் பாதி

வாரம் தோறும் ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் ஒளிரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் தம்பதியர்கள் இடையே உள்ள அன்பு, பாசம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மனைவியின் கைபக்குவத்தை கண்டு பிடிக்கும் கணவர் என புதிய போட்டி சுற்றுக்களுடன் புதுப்பொலிவுடன் களமிறங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர் விறுவிறுப்பாக நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும்.
முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் கணவரோ அல்லது மனைவியோ சைகைகள் மூலம் நடித்துக்காட்டி கொடுக்கப்படும் திரைப்பட பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். இறுதிச் சுற்றில் கணவரைப் போல் மனைவியும், மனைவியைப் கணவரும் நடிக்க வேண்டும்.
அதேபோல தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் குதூகளிக்கும் கலகலப்பான நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி மெகா டிவியில் ஞாயிறு தோறும் நண்பகல் 12.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு வெள்ளி இரவு 8.00 மணிக்கும், ஒளிபரப்பாகிறது.
இதனை தனது கலகலப்பான நகைச்சுவை கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்குகிறார் நடிகர் பாண்டியராஜன்.


Click it and Unblock the Notifications











