இளமை+அதிர்ச்சி= மாதவி

வாசுவிடம் சந்திரமுகி வரை உதவியாளராக இருந்தவர்தான் முருகேஷ். இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திற்கு மாதவி என பெயர் சூட்டியுள்ளார்.
இது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் இதுவரை இல்லாத, சொல்லாத ஒரு வித்தியாசமான காதல் கதை. இதில் இளமை உண்டு, இனிமை உண்டு, கூடவே யாரும் எதிர்பாராத அதிர்ச்சியும் உண்டு என்று புதிராக கூறுகிறார் முருகேஷ்.
படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கவிதையைப் படித்த அனுபவம் கிடைக்கும் என்கிறார் முருகேஷ்.
படம் முழுக்க நிறையப் புதுமுகங்கள். ஹீரோவாக ராஜ் நடிக்கிறார். நாயகியாக வருபவர் மோகனா. படு அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் நிறைய உழைப்பைக் கொடுத்து வருகிறாராம்.
சமீபத்தில் மலேசியாவுக்குப் போய் மோகனா உள்ளிட்டோரை வைத்து அழகாக இரு பாடல்களை சுட்டுள்ளனர். அத்துடன் படப்பிடிப்பும் முடிந்துள்ளதாம்.
மோகனாவின் அழகும், கதையின் கவித்துவமும் படத்துக்குப் புது பொலிவு சேர்த்துள்ளதாகவும் கூறுகிறார் முருகேஷ்.


Click it and Unblock the Notifications











