twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளத்தை உதறும் நரேன்

    By Staff
    |

    Naren in Malayalam film
    மலையாளத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு முழுக்க முழுக்க தமிழில் திறமை காட்ட தீர்மானித்துள்ளாராம் நரேன்.

    மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் நரேன். இவர் தமிழில் முதலில் நடித்த சித்திரம் பேசுதடி சூப்பர் ஹிட் படமானது. நடிப்பில் பேசப்பட்டார் நரேன். தொடர்ந்து மிஷ்கினின் 2வது படமான அஞ்சாதே-விலும், நரேனின் நடிப்பு பேசப்பட்டது.

    இதையடுத்து தமிழில் தீவிர கவனம் செலுத்த தீர்மானித்துள்ளாராம் நரேன். இதற்காக மலையாளத்தைக் கைவிடவும் அவர் துணிந்து விட்டார்.

    தற்போது மின்னா மின்னி கூட்டம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நரேன், தன்னைத் தேடி வரும் புதிய மலையாள இயக்குநர்களுக்கு ஸாரி சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

    தமிழில் தனது அடுத்த படத்தை படு நிதானமாகவும், கவனமாகவும் தொடங்க தீர்மனித்துள்ளார் நரேன். தற்போது பூக்கடை ரவி என்ற பெயரிலான புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். செல்வராகவனின் உதவியாளரான சிவக்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். இதுவிர மேலும் 2 தமிழ்ப் படங்களும் நரேனைத் தேடி வந்துள்ளன.

    தன்னைத் தேடி வரும் தமிழ்ப் பட வாய்ப்புகள், தமிழ்த் திரையுலகம் தரும் அங்கீகாரம், ஆதரவு, அதன் வீச்சு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முற்றிலும் தமிழ் நடிகராக மாறி விட தீர்மானித்துள்ளார் நரேன். இதற்காக மலையாளத் திரையுலகிலிருந்து முற்றிலும் வெளியேறி விடவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

    நரேனின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணமும் உண்டு. மலையாள நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கும் டுவென்டி20 படத்தில் நடிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் நரேன். இதனால் அம்மா, நரேன் மீது கோபமாக உள்ளது. மலையாளத்தைக் கைவிட நரேன் தீர்மானித்ததற்கு இதுவும் கூட ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நரேன் கூறுகையில், நான் தற்போது மலையாளத்தில் மின்னாம் மின்னி கூட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மீரா ஜாஸ்மின் எனக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுவே மலையாளத்தில் எனக்குக் கடைசிப் படமாக இருக்கும்.

    தமிழில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். அஞ்சாதே ரிலீஸாவதற்கு முன்பே இந்த முடிவை எடுத்து விட்டேன். இப்போது அஞ்சாதே படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு, எனது முடிவை மேலும் உறுதியாக்கியுள்ளது.

    மலையாளத்தில் என்னைப் போன்ற நடிகர்களுக்கு எதிர்காலமே இல்லை. புதிய திறமையை அங்கு யாரும் மதிப்பதில்லை, அனுமதிக்கவும் மறுக்கிறார்கள் என்றார் நரேன்.

    ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு நமக்கு நரேன் அளித்த பிரத்யேகப் பேட்டியின்போது அம்மாவை கடுமையாக சாடியிருந்தார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள், புதியவர்களை ஆதரிப்பதில்லை, வளர விடுவதில்லை.

    நான் பலமுறை மலையாளத் திரையுலகினரை சாடி பேட்டி அளித்துள்ளேன். ஆனால் அதை அப்படியே வெளியிடும் தைரியம் அங்குள்ள மீடியாக்களுக்கு இல்லை. அவர்கள் சூப்பர் ஸ்டார் நடிகர்களைத்தான் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

    தமிழில் அப்படி இல்லை. இது எனக்கு மிகவும் செளகரியாக இருக்கிறது. எனவே மலையாளத் திரையுலகுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருந்தார். இப்போது அஞ்சாதே படத்தின் முடிவு, நரேனின் முடிவை உறுதியாக்கி விட்டது.

    வந்தவர்களை வாழ வைத்த கோலிவுட், நரேனை மட்டும் கைவிட்டு விடுமா என்ன?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X