தசாவதாரம்...?

By Staff

Kamal
அபீஷியல் என்ற வார்த்தைக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் யாரும் அர்த்தம் கேட்க முடியாது. காரணம், தசாவதாரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவ்வப்போது அவர் சொல்லி வரும் அபீஷியல் சேதிகளால் குழப்பம்தான் விஞ்சி நிற்கிறது.

தசாவதாரம் படத்தின் ரிலீஸ் குறித்து பல தேதிகளை அறிவித்து விட்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இந்த நிலையில் மேலும் ஒரு தேதியை அறிவித்துள்ளார். லேட்டஸ்டாக அவர் கூறியுள்ள தகவலின்படி ஜூன் 6ம் தேதி கண்டிப்பாக தசாவதாரம் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தசாவதாரம் படத்தில் வைணவ மதத்தினரின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்குத் தடை விதிக்கக் கோரி ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்சன கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல, முற்றிலும் கற்பனையானவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்று கூறியுள்ளார் ரவி. இந்த வழக்கின் விசாரணை மே 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. இதை மேற்கோள் காட்டி ஜூன் 6ம் தேதி கண்டிப்பாக உலகம் முழுவதும் தசாவதாரம் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார் ரவி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 1000 பிரிண்டுகளுடன் தசாவதாரம் திரைக்கு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X