'கோவா'வில் மெலனி!

ஜெய், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பியா உள்ளிட்டோர் நடிக்கும் வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படம் கோவா. வெங்கட் பிரபு இயக்குகிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார்.
இப்படத்தில் வெளிநாட்டுப் பெண் கேரக்டர் ஒன்று உள்ளது. இதற்காக பல நடிகைகளை தேடிப் பார்த்தனர். கடைசியில் ஜெசிகா ஆல்பா நடிப்பார் எனக் கூறப்பட்டது. இப்போது அவரும் இல்லையாம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெலனி மேரி என்பவர் நடிக்கிறாராம். இவர் அதிகம் அறியப்படாத ஒரு நடிகையாகத் தெரிகிறது (காரணம், இவரது போட்டோவை எங்கு தேடியும் கிடைக்கலே..).
நவம்பரில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். முக்கியக் காட்சிகளை ஏற்கனவே கோவாவில் சுட்டு விட்டனர். அடுத்து மலேசியாவுக்குப் பறக்கவுள்ளனராம்.
இடையில் ஜெய்யால் சில தாமதங்கள் ஏற்பட்டன. ஹீரோயின் வேட்டையாலும் தாமதம் ஆனது. இப்போது எல்லாம் சரியாகி கோவா யூனிட் விறுவிறுப்படைந்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











