twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தலைவர்'-ரஜினி குறித்த ஆவணப் படம்!

    By Staff
    |

    Rajini releases documentary based on his life
    சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையப்படுத்தி தலைவர் எனும் பெயரில் ஒரு ஆவணப் படம் தயாராகியுள்ளது. இதனை ரஜினியே ராகவேந்திரா மண்டபத்தில் வெளியிட்டார்.

    ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ஆகி பின்னர் அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவரைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள் என பல விஷயங்களின் தொகுப்பாக இந்த ஆவணப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ரஜினி நடித்த படங்களின் முக்கிய காட்சிகள், பாடல், விழாக்களில் ரஜினி பேசிய உரைகள், வெற்றிப்பட பட்டியல், ஏழைகளுக்கு செய்யும் நற்பணிகள் போன்றவற்றையும் இதில் இணைத்துள்ளனர்.

    இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தவர் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கவின் கார்த்தி. இவர் ஒரு எஞ்ஜினியரிங் பட்டதாரி. ரஜினியிடம் முன் அனுமதி பெற்று அவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். முழு வேலைகளும் முடிந்ததும், ரஜினியிடம் காட்டி, அவர் சொன்ன திருத்தங்களைச் செய்து முடித்த பிறகு, நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் எளிய நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த டிவிடியைத் தயாரித்த கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை ரஜினி பாராட்டினார். இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ரஜினி.

    அடுத்த மாதம் முதல் இந்த டிவிடிகள் விற்பனைக்கு வருகின்றன.

    ஏற்கெனவே ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து டாக்டர் காயத்ரி என்பவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X