பகலவன் பணிகளைத் தொடங்கினார் சீமான்!

By Chakra

Seeman
விஜய் நடிக்கும் பகலவன் படத்தின் வேலைகளைத் தொடங்கினார் இயக்குநர் சீமான்.

இதுவரை அவர் 5 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் தம்பி படம் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றது. கடைசியாக அவர் இயக்கி வெளிவந்த படம் வாழ்த்துகள்.

அதன் பிறகு இலங்கைப் பிரச்சினை குறித்த போராட்டங்கள், புதிய இயக்கம் ஆரம்பித்து கட்சியாக மாற்றுவது மற்றும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் சீமான்.

இருந்தாலும் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய்யை வைத்து பகலவன் என்ற புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சீமான். ஆனால் அப்போது பார்த்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்தது தமிழக அரசு.

சிறைக்குள் இருந்தபடியே இந்தப் படத்துக்கு முழுமையான திரைக்கதையை எழுதி முடித்த சீமான், இப்போது விடுதலையானதும் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். வரும் ஜனவரியில் பகலவன் படம் முழு வீச்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சீமான் கூறுகையில், "பகலவன் சிறப்பான படைப்பாக வரும். தம்பி விஜயக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X