'சல்புல் பாண்டே' சிம்பு!!
இந்தியில் வெளியான படங்களில் கடந்த ஆண்டு சக்கைப் போடு போட்ட படம் சல்மான்கானின் தபாங். அதிரடியான படம். சல்மான்கான் ஹீரோ. இன்னும் கூட நான்கு தோல்விகளை அவர் தைரியமாகத் தரலாம். அப்படியொரு வெற்றி!
இதில் சல்மான்கான் ஏற்றிருந்த வேடத்துக்குப் பெயர் சல்புல் பாண்டே. காமெடி ப்ளஸ் கிறுக்குத்தனம் கொண்ட ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடம் இது.
இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக்குவதில் மும்முரமாக உள்ளனர், உத்தமபுத்திரன் படத்தைத் தயாரித்த மோகன் அப்பாராவ் மற்றும் டி ரமேஷ். இந்தப் படத்தில் ஹீரோ ரோலுக்கு சிம்புவை அணுகியுள்ளனர். அவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
இதே படத்தை தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள். பவன் கல்யாண் ஹீரோ.
Comments


Click it and Unblock the Notifications