twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிசையையும் இழந்த ஆஸ்கர் குழந்தைகள்

    By Staff
    |

    Rubina with Frieda
    ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த இரண்டு குழந்தைகளின் குடிசைகளையும் மேற்கு ரயில்வே அதிகாரிகள் இடித்துள்ளனர். இதையடுத்து அந்த குழந்தைகள் தங்குவதற்கு வீடு இன்றி தவித்து வருகின்றனர்.

    சமீபத்தில் இந்தியாவில் இருக்கும் சேரிகளை மையமாக வைத்து எடுக்கபட்ட ஸ்லம்டாக் மில்லினர் என்ற படம் ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.

    படம் வசூலில் சக்கை போடு போட்டு கோடிகளை கொட்டி குவித்த போதிலும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த அசாருதின் இஸ்மாயில் மற்றும் ருபினா அலி ஆகியோர் குடிசை பகுதியிலே தொடர்ந்து வசித்து வந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் சிறுவன் அசாரின் குடிசை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடிசைகள் அனுமதியில்லாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி மேற்கு ரயில்வே துறையினர் இடித்தனர்.

    அதேபோல் கடந்த 20ம் தேதி அப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரும் ருபினாவின் குடிசையும் இடிக்கப்பட்டது. இதையடுத்து அப்படத்தில் நடித்த இந்த இரண்டு குழந்தைகளும் தற்போது வீடுல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இது தேச அவமானம்...

    இது குறித்து இந்த படத்துக்கு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி கூறுகையில்,

    அந்த இரு குழந்தைகளுக்கும் கோடக் தியேட்டரில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது அவர்களுக்கு இருப்பதற்கு கூட வீடில்லை. இது நமது தேசத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானம். அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலையில் நாம் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்றார் அவர்.

    தற்போது ரசூல் பூக்குட்டி புனேயில் இருக்கும் ஸ்பான்டன் என்ற என்ஜிஓ அமைப்புடன் இணைந்து சேரியில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு கரம் கொடுக்க இருக்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X