ஸ்லம்டாக் புகழ் ரூபினாவை விற்க முயற்சி - தந்தை கைது

By Staff

Rubina with father
மும்பை: ஸ்லம்டாக் மில்லியனர் படப் புகழ் சிறுமி ரூபினா அலியை விற்க முயற்சித்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கிய அவரது தந்தை ரபீக் அலி குரேஷி கைது செய்யப்பட்டார்.

ரபீக்கின் முதல் மனைவி (இவர்தான் ரூபினாவின் தாயார்) கொடுத்த புகாரின் பேரில் ரபீக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரபு ஷேக் ஒருவருக்கு தனது மகளை ரூ. 1.78 கோடிக்கு விற்க பேரம் பேசியதாக கையும் களவுமாக பிடிபட்டார் ரபீக் அலி குரேஷி. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

இதையடுத்து மும்பை போலீஸார் ரபீக்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில் ரபீக்கை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் அவரது முதல் மனைவி குர்ஷிதாவும் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவரிடமிருந்து மகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து குர்ஷிதா கூறுகையில், துபாயைச் சேர்ந்த பணக்கார ஷேக் ஒருவரிடம் எனது மகளை விற்க ரபீக் குரேஷி முயற்சிப்பது குறித்து எனக்கு 2 வாரங்களுக்கு முன்பு தெரிய வந்தது.

எனது மூத்த மகள் இதை என்னிடம் கூறினாள். ஆனால் அதை நான் நம்பவில்லை. இதுபோன்ற செயலில் ரபீக் ஈடுபட மாட்டார் என நம்பினேன்.

எனது முன்னாள் கணவரும், அவரது தற்போதைய மனைவியுமான மினா ஆகியோருக்கு பணம்தான் குறி. 9 வயதே ஆகும் எனது மகளுக்குக் கிடைத்த புகழைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்க வெறியாக உள்ளனர் என்றார்.

குர்ஷிதா கொடுத்த புகாரைப் பதிவு செய்த போலீஸார் குரேஷியை அழைத்து விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது குரேஷி, துபாய் ஷேக்கிடம், ரூபினாவை விற்க பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை திரட்டி வருகின்றனர்.

அதேசமயம், தான் யாருடனும் போக விரும்பவில்லை. எனது தந்தையுடன்தான் வசிக்க விரும்புகிறேன் என ரூபினா போலீஸாரிடம் தெரிவித்துள்ளாளாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X