இந்தி 'கஜினி' கிளைமாக்ஸ் 'லீக்'!

By Staff

Aamir Khan with Asin
ஆமிர்கான், ஆசின் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள கஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை விவரித்து ஒரு எஸ்.எம்.எஸ். உலா வருகிறது. இதனால் கஜினி பட யூனிட் படு டென்ஷனாகியுள்ளது.

தமிழில் பெரும் கலக்கு கலக்கிய கஜினி இப்போது அதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. சூர்யா வேடத்தில் ஆமிர்கானும், ஆசின் வேடத்தில் அவரே மறுபடியும் நடித்துள்ளனர். நயன்தாரா கேரக்டரில் ஜியா கான் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், கஜினி படத்திற்கு முன்பதிவு செய்ய மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த நிலையில், எஸ்.எம்.எஸ் ரூபத்தில் கஜினி பட யூனிட்டுக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது.

மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த எஸ்.எம்.எஸ். படு வேகமாக பரவி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது அந்த எஸ்.எம்.எஸ்ஸில் என்கிறீர்களா. வேறு ஒன்றுமில்லை. கஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் அதில் புட்டுப் புட்டு வைத்துள்ளனர்.

அந்த எஸ்.எம்.எஸ்ஸில், சிலர் ஆமிர்கானின் காதலியைக் கொன்று விடுகின்றனர். பின்னர் ஆமிர் தனது நினைவை இழக்கிறார். அந்த நிலையில், கொலையாளி யார் என்பதை அறிய முயலுகிறார். ஆனால் கொலையாளியே ஆமிர்தான். இப்போது கஜினியைப் பார்க்க தயாராகுங்கள் என்று போகிறது அந்த எஸ்.எம்.எஸ்.

கடந்த சில நாட்களாகவே இந்த எஸ்.எம்.எஸ். மும்பையை வலம் வந்து கொண்டிருக்கிறதாம்.

தமிழ் கஜினி படத்தின் கிளைமாக்ஸை இந்தியில் மாற்றியிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் முருகதாஸ் அறிவித்துள்ளார். எனவே இந்த எஸ்.எம்.எஸ். கிளைமாக்ஸ்தான் உண்மையானதா என்பது படம் திரைக்கு வந்தால்தான் தெரியும்.

ஆனால் எஸ்.எம்.எஸ்.ஸில் இருப்பதுதான் உண்மையான கிளைமாக்ஸாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர்.

இதுகுறித்து சுரபி என்ற இளம் மாணவி கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு எனக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தது. இதைப் பார்த்து விட்டு நான் எரிச்சலாகி விட்டேன். காரணம், படத்தை பார்த்து ரசிக்க நான் பெரும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த ஆர்வத்தை இந்த எஸ்.எம்.எஸ். கெடுத்து விட்டது.

இதுதான் உண்மையான கிளைமாக்ஸாக இருந்தால் படம் பார்க்கும் விருப்பமே போய் விடும் என்றார் கடுப்பாக.

இப்படிக் கடுப்பாக இவர் சொன்னாலும் தனது தோழர், தோழியருக்கெல்லாம் இந்த எஸ்.எம்.எஸ்ஸை பார்வர்ட் செய்து வைத்துள்ளாராம் சுரபி.

இந்த எஸ்.எம்.எஸ். செய்தியால் கஜினி பட யூனிட் கடுப்பாக இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X