'எந்திரன் சுஜாதாவின் கதை அடிப்படையில் எழுதப்பட்டது!' - ஷங்கர்

ரஜினி - ஐஸ்வர்யா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தற்பொழுது வெளிவந்துள்ள எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அமுதா தமிழரசன் மற்றும் ஆர்னிகா நாசர் ஆகிய இருவரும் தனிதனியாக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி போலீஸார் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக ஷங்கர் தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில், "எந்திரன் படத்தின் கதை மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் என் இனிய எந்திரா புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் டைட்டிலில் கதை என்று தன் பெயரையே போட்டுக் கொண்டுள்ளார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மூலக்கதை என்று கூட அவர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
Comments


Click it and Unblock the Notifications