குழந்தைகளை மகிழ்வித்த ஜோ, சூர்யா

By Staff

Surya and Jyothika with daughter Diya
புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும், நோயாளிகளையும் சந்தித்த ஜோதிகா, சூர்யா தம்பதியினர், அவர்களுக்கு வெள்ளை ரோஜா கொடுத்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று ரோஜாக்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நட்சத்திர தம்பதிகளான சூர்யாவும், ஜோதிகாவும், சென்னை அண்ணா சாலையில் உள்ள அப்பல்லோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் புற்று நோய் நோயாளிகளையும், குழந்தைகளையும் சந்தித்து வெள்ளை ரோஜாக்களை வழங்கினர்.

பின்னர் அவர்களிடம் புன் முறுவலுடன் உரையாடினர். குழந்தைகள் நடத்திய கலை நிகழ்ச்சியையும் கண்டுகளித்தனர். நீண்ட நேரம் அவர்களுடன் செலவிட்டனர்.

குழந்தைகளுக்கும், ெபரியவர்களுக்கும், சூர்யா, ஜோதிகாவைப் பார்த்ததும் உற்சாகமாகி விட்டது. அவர்களுடன் ஆவலுடன் பேசி மகிழ்ந்தனர்.

தங்களது தினசரி சிகிச்சை வாழ்க்கையிலிருந்து சற்று விலகியிலிருந்து மன ஆறுதல் பெற வழி வகுத்ததற்காக சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் நன்றி கூறினர் நோயாளிகள்.

தங்களது நேரத்தை பரிவும், அன்பும் கலந்து நோயாளிகளுடன் பரிமாறிக் கொண்ட திருப்தியில், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தி விடைபெற்றனர் சூர்யாவும், ஜோதிகாவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X