'பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் படம் எடுக்கணும்' - கருணாஸ் போட்ட 'குண்டு'

By Sudha

Karunaas
அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சினிமா தயாரிப்பாளராகி நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என்றார் காமெடி நடிகர் கருணாஸ்.

சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

பாடல் குறுந்தகடை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டார்.

விழாவில், நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு பேசுகையில், "அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் படம் தயாரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் படம் தயாரிக்க முன்வரவேண்டும். அப்படி முன்வந்தால், எந்த நேரத்திலும் கதர் வேட்டி கட்ட நான் தயார்.

அரசியல்வாதிகள் எடுக்கிற படத்தில் நடித்தால், அந்த கட்சியின் முத்திரை விழுந்துவிடும் என்று நடிகர்-நடிகைகள் பயப்பட கூடாது. சினிமா, ஒரு தொழில். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். தகுதி உள்ளவர்கள் அதில் நடிக்கலாம்...,'' என்றார் அதிரடியாய்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில், "காங்கிரஸ்காரர்கள் பெரும் பணம் வைத்துக் கொண்டிருக்கவில்லை" என்றார்.

இயக்குநர் டி.பி.கஜேந்திரன், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

அரசியல்வாதிகள் படம் எடுத்தால் எந்தப் 'பிரச்சினை' வந்தாலும் எளிதில் சமாளித்து விடலாம் என்று கருதுகிறாரோ கருணாஸ்...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X