விஜயகாந்த் படத்தில் தாய்லாந்து வில்லன்!

கேப்டன் சினி கிரியேசன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம் விருதகிரி. இந்தப் படத்தில் அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். சண்டை காட்சிகள் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் எடுக்கப்பட்டது படத்தின் சிறப்பு அம்சமாகும்
விஜயகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். விஜயகாந்த் இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் தாய்லாந்து நடிகர் வில்லனாக அறிமுகமாகிறார்.
விருதகிரி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடக்கிறது. விஜயகாந்த்தின் தேமுதிகவைச் சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
Comments
இசை வெளியீட்டுவிழா தாய்லாந்து வில்லன் விஜயகாந்த் விருதகிரி music launchj thailand villan vijayakanth


Click it and Unblock the Notifications