குத்து பாட்டும் வெத்துப் பாட்டும்..வைரமுத்து

By Staff

Peranmai
தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுவது அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் படங்களின் வெற்றி குறைந்து கொண்டே வருவதாக கவியரசு வைரமுத்து வருத்தப்படுகிறார்.

ஜெயம் ரவி நடித்துள்ள, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள பேராண்மை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,

தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுவது அதிகமாகி இருக்கிறது. ஆனால், படங்களின் வெற்றி குறைந்துகொண்டே வருகிறது. வெற்றிதான் லாபம் தரும், வெற்றிதான் உற்சாகம் தரும். நான் பாட்டு எழுதாத படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

குடகு மலையில் மழை பெய்தால்தான் மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை நிரம்பினால்தான் கல்லணை நிரம்பும். கல்லணை நிரம்பினால்தான் கடை மடைகள் எல்லாம் நிரம்பும். எங்கோ பெய்கிற மழையில் பல பேர்களின் வாழ்க்கை இருக்கிறது.

இங்கே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அர்ச்சனா மோகன், வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார் என்றார். வித்யாசாகரின் மெட்டுக்குத்தான் நான் பாட்டு எழுதினேன்.

குத்து பாடல்களை விட, நல்ல பாடல்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசை. குத்து பாட்டும் தேவைதான். நான் கூட, ''கட்டிப்புடி...கட்டிப்புடிடா'' பாடலை எழுதியிருக்கிறேன். பத்து பாடல்களில், ஒரு பாட்டு குத்து பாட்டாக இருந்தால், பரவாயில்லை. பத்துமே குத்து பாட்டாக இருந்தால், அவை வெத்துப்பாட்டாகி விடும் என்றார் வைரமுத்து.

நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி்த்துறை இணையமைச்சர் நெப்போலியன் பேசுகையில்,

இந்த படத்தில் இட ஒதுக்கீடு பற்றி ஒரு வசனம் வருகிறது. இட ஒதுக்கீட்டுத்துறை அமைச்சர் என்பதால், என்னை இந்த விழாவுக்கு அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நூறு வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். படிப்பில் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் தான் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றார்கள். அது, படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த வருடம் நாடு முழுவதும் மொத்தம் 790 பேர் ஐஏஎஸ் தேர்வாகி இருக்கிறார்கள். அதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 96 பேர்கள். இதில், தாழ்த்தப்பட்டவர்கள் 62 பேர். பிற்படுத்தப்பட்டவர்கள் 26 பேர். மற்றும் பழங்குடியினர் ஒருவர். சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்கள் 3 பேர். உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் 4 பேர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X