புற்று நோயுடன் போராடி வந்த ஜேட் கூடி மரணம்

By Staff

Jade Goody
லண்டன்: புற்று நோய் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி இன்று காலை மரணமடைந்தார்.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் பிரபலமானவர் ஜேட் கூடி. அவருக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் இடையிலான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இறுதியில், அவருக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்தியா வந்திருந்த ஜேட் கூடி அவசரமாக லண்டன் திரும்பினார்.

அவருக்கு கடந்த சில வாரங்களாக உடல் நலம் மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில் இன்று காலை தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸக்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஜேட் கூடி மரணமடைந்தார்.

27 வயதான ஜேட் கூடிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தனது காதலரை கடந்த மாதம்தான் திருமணம் செய்து கொண்டார் ஜேட் கூடி.

இன்று காலை 3.55 மணிக்கு தூக்கத்தில் இருந்தபோதே ஜேட் கூடியின் மரணம் சம்பவித்ததாக அவரது தாயார் ஜேக்கி பட்டன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X